Sunday, September 21, 2008

ஆத்ம ஜயம் - The inner victory

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ - அட
மண்ணில் தெரியுது வானம், அதுநம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியில் சோர்வோமோ? - அட,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவும் பராசக்தியே!

என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளே!
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?

Won't the hands not grasp
those things that we see?
Won't the fingers not touch
the sky above me?
Are we destined to give up
Struggling for what we have sought?
Answer me, you that resides in
The sky, the land, my sight and my thought!

So many praises, honours and victories!
So many accolades!
We knew they were ours,
Should we vanquish the Self.
The saintly scriptures we knew.
We knew how to kill the I.
Oh, what shame ! We kneel as slaves now,
To the Self that refuses to die.

- Bharathiyar

Thursday, April 10, 2008

யான் பிறந்தேன் - I was born

நித்த நித்தம் துயின்றேழுந்து
புத்தியில்லா புல்லருடன் போக்கி
அத்தமித்தவுடன் விழு பணத்தை
கல்லை மண்ணை தொழுதற்கோ
யான் பிறந்தேன்?

To wake up everyday,
And live with monumental idiots,
And to wait for the sunset when I
Pray to money and stone and sand -
Is this why I was born?

Bharathiyar

Tuesday, March 11, 2008

பரசிவ வெள்ளம் - The Flood of God

உள்ளும் புறமுமாய் உள்ள தெலாந் தானாகும்
வெள்ள மொன்றுண் டாமதனைத் தெய்வமேன்பார் வேதியரே.

வேண்டுவோர் வேட்கையாய் வேட்பராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே.

Within and without, it is everything
It is a flood. And the scholars call it God.

It is the want, It is the one that wants,
It is the object of the want, It is the giver.

- Bharathiyar